டி20 உலக கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் 80% மழை பெய்ய வாய்ப்பு - போட்டி ரத்தாகும் அபாயம்
|அன்று அதிக அளவில் மெல்போர்னில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது.தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 8 ணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் இரு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகிறது.
சூப்பர் 12 சுற்று நாளை மறுநாள் தொடங்க உள்ளது.இதில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் அன்று மெல்போர்னில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .இந்த தகவல் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
போட்டி நடக்கும் அன்று மாலை80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி உள்ளான.இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் அறிவித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.
முன்னதாக நேற்று பிரிஸ்பேனில் நடைபெற இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது