< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: 3 போட்டிகளில் 2 முறை... சிறந்த பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: 3 போட்டிகளில் 2 முறை... சிறந்த பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

தினத்தந்தி
|
13 Jun 2024 9:11 PM IST

ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

நியூயார்க்,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, முதல் 3 ஆட்டங்களில் முறையே அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 3-வது அணியாக சூப்பர் 8 சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டராக சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங் வழங்கி கவுரவித்தார்.

3 போட்டிகளில் 2-வது முறையாக சிராஜ் இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்