< Back
கிரிக்கெட்
முத்தரப்பு டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

தினத்தந்தி
|
7 Oct 2022 11:24 AM IST

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி வெற்றது.

கிறிஸ்ட்சர்ச்,

முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்

இந்நிலையில் இன்று தொடங்கிய இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பாபர் ஆசம் 22 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ரிஸ்வானுடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஷான் மசூத் 22 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஹைதர் அலி 6 ரன்னுக்கும், இப்டிகார் அகமது 13 ரன்னுக்கும், ஆசிப் அலி 4 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 78 ரன்கள் குவித்தார். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெஹதி ஹ்சன் மிராஸ் , சபீர் ரஹ்மான் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து சபீர் ரஹ்மான 14 ரன்னுக்கு ஆட்ட்ம் இழந்தார். அடுத்து லிட்டன் தாஸ் மற்றும் ஆபிப் ஹொசைன் ஆகிய்யோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் முகமது நவாஸ் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.

இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 35 ரன்களும், யாசிர் அலி அவுட் ஆகாமல் 42 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும், தகானி, ஷதாப் கான், ஹாரிஸ் ராப் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மேலும் செய்திகள்