< Back
கிரிக்கெட்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருது வென்ற வீரர் யார் தெரியுமா..?

image courtesy: twitter/@BCCI

கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருது வென்ற வீரர் யார் தெரியுமா..?

தினத்தந்தி
|
16 July 2024 12:52 PM IST

ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்தவகையில் இந்த தொடரில் சிறந்த பீல்டராக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை தலைமை பயிற்சியாளரான விவிஎஸ் லட்சுமணன் வழங்கி கவுரவித்தார்.




மேலும் செய்திகள்