ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்; கடைசி இரு போட்டிகளுக்கான வங்காளதேச அணி அறிவிப்பு
|கடைசி இரு போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
டாக்கா,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி இரு டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த அணியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் இடம் பெறாத சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), லிட்டன் குமார் தாஸ், தன்சித் ஹசன் தமீம், ஷகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி அனிக், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், சவுமியா சர்கார், தன்வீர் இஸ்லாம், முகமது சைபுதீன்.