< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் சேர்ப்பு

Image Courtesy : ANI 

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் சேர்ப்பு

தினத்தந்தி
|
29 Aug 2023 9:35 AM IST

அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள்அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மேலும், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார்.




மேலும் செய்திகள்