< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..?

தினத்தந்தி
|
15 Jan 2024 1:18 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வில்லியம்சனுக்கு 3வது டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் பொறுப்பு கேப்டன் டிம் சவுதி அணியை வழி நடத்தினார்.

காயத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அவர் எஞ்சிய டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக டிம் செய்பர்ட் அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்