< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்

image courtesy; AFP

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்

தினத்தந்தி
|
9 April 2024 8:07 AM IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தலைமை பயிற்சியாளர் இல்லாமல் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரை முன்னிட்டு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணி முன்னாள் ஆல் ரவுண்டரான அசாத் மஹ்மூத் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முகமது யூசுப் பேட்டிங் பயிற்சியாளராகவும், சயீத் அஜ்மல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், வஹாப் ரியாஸ் சீனியர் அணியின் மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் செய்திகள்