இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
|இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இலங்கை சென்றடைந்து விட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹசரங்காவுக்கு பதிலாக சரித் அசலங்கா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் வனிந்து ஹசர்ங்கா ஒரு வீரராக தொடர்கிறார். மேலும் சீனியர் வீரரான தினேஷ் சண்டிமால் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை டி20 அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்ணாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், காமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மஹேஷ் தீக்சனா, சமிந்து விக்ரமசிங்கே, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரு பெர்ணாண்டோ.