< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் : தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க்ரம் விலகல்
|16 Jun 2022 1:17 AM IST
தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது .இரு அணிகளும் மோதும் 4வது போட்டி நாளை நடைபெறுகிறது .
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் முதல் டி20 போட்டிக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 7 நாட்கள் தனிமைபடுத்துதலில் இருந்தார் .இதனால் 3 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை .இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்