இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விடுவிப்பு
|இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இரு அணிகளும் தயாராவதற்கு இந்த தொடர் மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பக்கார் ஜமான், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, ஹாரிஸ் ராப், முகமது அமீர், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக ஹசன் அலி விளையாட பாகிஸ்தான் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.