< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்...இந்திய அணியில் இடம் பிடிக்கும் இளம் வீரர்...? - வெளியான புதிய தகவல்...!

கோப்புப்படம் 

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்...இந்திய அணியில் இடம் பிடிக்கும் இளம் வீரர்...? - வெளியான புதிய தகவல்...!

தினத்தந்தி
|
7 Nov 2023 8:50 AM IST

உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளன.

மும்பை,

உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி, பாண்ட்யா, ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக ருதுராஜ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரியான் பராக் நிச்சயம் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக விளையாடினார்.

10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்டாக் அலி டிராபியில் நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் (182.79) பராக் அதிக ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்