< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
14 Feb 2024 9:19 AM GMT

நியூசிலாந்து அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தனிப்பட்ட காரணங்களுக்காக கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை. மேலும் காயம் காரணமாக டேரில் மிட்செல் இடம் பெறவில்லை.

நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி முதல் போட்டிக்கான அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். அதேபோல் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் பவுல்ட் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்; மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாம்ப்மென், டெவான் காண்வே (விக்கெட் கீப்பர்), லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, ஜோஷ் கிளார்க்சென் (அறிமுக வீரர்), டிம் சவுதி (முதல் போட்டிக்கு மட்டும்), டிரண்ட் பவுல்ட் (கடைசி 2 போட்டிக்கு மட்டும்).

மேலும் செய்திகள்