< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்: இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணனை நியமிக்க முடிவு
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்: இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணனை நியமிக்க முடிவு

தினத்தந்தி
|
27 Oct 2023 2:04 AM IST

இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி நிறைவடைகிறது. மறுவாரமே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் சொந்த மண்ணில் விளையாடுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நவம்பர் 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. அதன் பிறகு அவரை மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தும் என்று தெரிகிறது. ஆனால் அதை அவர் ஏற்பாரா என்பது தெரியவில்லை. இதற்கு மத்தியில் ஆஸ்திரேலிய தொடர் வருவதால் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க லட்சுமணனை நியமிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்