ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு...!
|ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 546 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தொடரின் முதலாவது போட்டி அடுத்த மாதம் 5ம் தேதி சட்டோகிராமில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர் நிறைவடைந்ததை அடுத்து டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் டி20 தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்குகிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி விவரம்:-
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், ரோனி தாலுக்தார், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், தஸ்கின் அஹ்மத், எபாடோட் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், ரிசாட் ஹொசைன், அப்பிப் ஹொசைன்.