< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்; முதல் இந்திய  பந்துவீச்சாளராக இமாலய சாதனை படைத்த  யுஸ்வேந்திர சாஹல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்; முதல் இந்திய பந்துவீச்சாளராக இமாலய சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல்

தினத்தந்தி
|
8 May 2024 5:23 PM IST

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவரில் 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் முதல் இந்திய வீரராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் வீழ்த்திய ஒரு விக்கெட் மூலம் அனைத்து வகையாக டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து சாஹல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்