< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு
|21 May 2024 8:16 PM IST
வங்காளதேச அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
ஹூஸ்டன்,
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்கள் அணி விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்த தொடருக்கான வங்காளதேச அணி ஷாண்டோ தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு வங்காளதேச அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.