< Back
கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை..!!

Image Courtesy : Twitter @ICC

கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை..!!

தினத்தந்தி
|
9 Jun 2022 5:32 PM GMT

இன்றைய வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லர், டூ சென் அதிரடியால் 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இதற்கு முன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி சேஸ் செய்த மிக பெரிய இலக்கு 208 ரன்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் சேஸ் செய்ததே அந்த அணியின் சாதனையாக இருந்தது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அந்த சாதனையை முறியடித்து (212 ரன்கள் )புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்