டி20 கிரிக்கெட்; யுஏஇ-க்கு எதிரான சதம்...3வது ஆப்கானிஸ்தான் வீரராக குர்பாஸ் நிகழ்த்திய சாதனை...!
|யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஷார்ஜா,
யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 29ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-யை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக ஆடிய குர்பாஸ் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார்.
இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முகமது ஷஷாத் மற்றும் ஹஸ்ரத்துல்லா ஷசாய் ஆகிய இருவர் மட்டுமே சதம் அடித்திருந்த வேளையில் தற்போது மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரராக குர்பாஸ் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.