< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி; டெல்லியிடம் படுதோல்வி அடைந்த தமிழக அணி...!
|24 Oct 2023 7:18 AM IST
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது தமிழக அணி.
டேராடூன்,
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் தமிழக அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தமிழக அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தமிழக 13 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
டெல்லி தரப்பில் சுயாஷ் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தமிழக அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன. வரும் புதனன்று தமிழக அணி மத்தியப் பிரதேசத்தை எதிர்கொள்கிறது. வெள்ளியன்று லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நாகாலாந்துடன் மோதுகிறது.