< Back
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அபராஜித் கேப்டன்
கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அபராஜித் கேப்டன்

தினத்தந்தி
|
16 Sept 2022 2:04 AM IST

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணிக்கு பாபா அபராஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணிக்கு பாபா அபராஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு:-

பாபா அபராஜித் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைகேப்டன்), சாய் சுதர்சன், டி.நடராஜன், எம்.ஷாருக்கான், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர், எம்.சித்தார்த், வருண் சக்ரவர்த்தி, சுரேஷ் குமார், ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன், ஆர்.சிலம்பரசன், முருகன் அஸ்வின், அஜிதேஷ்.

மேலும் செய்திகள்