< Back
கிரிக்கெட்
இப்படி பந்து வீசினால் சூர்யகுமார் யாதவை விரைவில் அவுட்டாக்கலாம் - ராயுடு
கிரிக்கெட்

இப்படி பந்து வீசினால் சூர்யகுமார் யாதவை விரைவில் அவுட்டாக்கலாம் - ராயுடு

தினத்தந்தி
|
12 May 2024 8:38 PM GMT

கொஞ்சம் மெதுவாக வைடு போன்ற அகலமான பந்தை வீசினால் சூர்யகுமாரை விரைவில் அவுட்டாக்கலாம் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 7 விக்கெட்டுகள் இழப்ப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

முன்னதாக இந்த போட்டியில் உலகில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக திகழும் சூர்யகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக தடுமாறினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கக்கூடிய அவர் இப்போட்டியில் 14 பந்துகளில் வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 11 ரன்களில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமானது.

இந்நிலையில் கொஞ்சம் மெதுவாக வைடு போன்ற அகலமான பந்தை வீசினால் சூர்யகுமாரை விரைவில் அவுட்டாக்கலாம் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இந்த யுக்தியை கடந்த 2023 உலகக்கோப்பையில் அவருக்கு எதிராக ஆஸ்திரேலியா கச்சிதமாக பயன்படுத்தியதாகவும் ராயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"பந்து வீச்சை பொறுத்த வரை சூர்யகுமார் யாதவுக்கு எதிராக ஒரு திட்டம் இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் ஸ்லோவாக வைடாக வீச வேண்டும். அதை நாம் கடந்த உலகக்கோப்பையிலும் பார்த்தோம். பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாகவும் மைதானத்தின் பவுண்டரி அளவு சற்று பெரியதாகவும் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக இந்த திட்டத்தை எதிரணிகள் பயன்படுத்தலாம். சூர்யகுமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் உழைக்க வேண்டும்.

ஸ்பின்னர்களுக்கு எதிராக மும்பை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ரோகித் சர்மா பெரிய சிக்சர்கள் அடிப்பதற்கு பெயர் போனவர். ஆனால் இன்று அவர் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்தார். அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது மும்பை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்