< Back
கிரிக்கெட்
மிரட்டலான கேட்ச் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய டேவிட் வார்னர்-  வைரல் வீடியோ

Image Courtesy: Screengrab Instagram t20worldcup

கிரிக்கெட்

மிரட்டலான கேட்ச் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய டேவிட் வார்னர்- வைரல் வீடியோ

தினத்தந்தி
|
25 Oct 2022 4:16 PM GMT

டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை தனது அபாரமான பீல்டிங் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பெர்த்,

டி20 உலக கோப்பையில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 59 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை தனது அபாரமான பீல்டிங் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இலங்கை இன்னிங்சின் 12-வது ஓவரின் போது அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா சிக்சருக்கு அடிக்க முயன்ற பந்தை டேவிட் வார்னர் லாங் ஆப் திசையில் இருந்து வேகமாக ஓடி வந்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். அவரின் இந்த கேட்ச் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்