< Back
கிரிக்கெட்
சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
கிரிக்கெட்

'சூப்பர் 8' சுற்று: இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

தினத்தந்தி
|
20 Jun 2024 7:54 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.

செயிண்ட் லூசியா,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றுவரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரூதர்போர்டு சில பவுண்டரிகள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்