< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
'சூப்பர் 8' சுற்று: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
|20 Jun 2024 7:41 PM IST
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்
பிரிஜ்டவுன்,
9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் 'சூப்பர் 8 ' சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி ' சூப்பர் 8'சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று (வியாழக்கிழமை) பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.