< Back
கிரிக்கெட்
சூப்பர் 8 சுற்று: ஹோப் அதிரடி... அமெரிக்காவை எளிதில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்று: ஹோப் அதிரடி... அமெரிக்காவை எளிதில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

தினத்தந்தி
|
22 Jun 2024 8:58 AM IST

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹோப் 82 ரன்கள் குவித்தார்.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - அமெரிக்கா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 128 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கவுஸ் 29 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரசல் மற்றும் சேஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஷாய் ஹோப் - சார்லஸ் இணை வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. ஹோப் அதிரடியாக விளையாட, சார்லஸ் நிதானமாக விளையாடினார். 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சார்லஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பூரனும் அதிரடியில் வெளுத்து கட்ட வெஸ்ட் இண்டீஸ் எளிதில் 10.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கிய ஹோப் 82 ரன்கள் குவித்தார்.

மேலும் செய்திகள்