< Back
கிரிக்கெட்
சூப்பர் 12 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

சூப்பர் 12 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
30 Oct 2022 6:50 AM GMT

முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பெர்த்,

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனை அடுத்து இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்