< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
முதுகுவலியால் அவதி; ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஸ்ரேயாஸ் தவறவிட வாய்ப்பு
|23 March 2023 5:00 AM IST
ஐ.பி.எல். தொடரை ஸ்ரேயாஸ் முழுமையாக தவறவிடப்போகிறார் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஐ.பி.எல். தொடரை அவர் முழுமையாக தவறவிடப்போகிறார் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரேயாஸ் அய்யர், ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.