< Back
கிரிக்கெட்
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு
கிரிக்கெட்

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு

தினத்தந்தி
|
14 Feb 2023 6:40 AM IST

இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.

துபாய்,

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகினர். அதன்படி, சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகினர்.

இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றார். ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார்.

கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்தார். இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.

மேலும் செய்திகள்