பாபர் அசாமின் சாதனையை தகர்த்த சுப்மான் கில்
|ஒருநாள் போட்டியில் முதல் 26 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
டிரினிடாட்,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் இந்திய வீரர் சுப்மான் கில் 34 ரன்கள் அடித்தார். இதன்மூலம் அவர் ஒருநாள் போட்டியில் முதல் 26 இன்னிங்ஸ்களில் 1352 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பாபர் அசாம் தனது முதல் 26 இன்னிங்ஸ்களில் 1322 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை கில் தற்போது தகர்த்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் முதல் 26 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்த முதல் 5 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-
சுப்மான் கில் (இந்தியா) - 1352 ரன்கள்
பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 1322 ரன்கள்
ஜோனதான் டிராட் (இங்கிலாந்து) - 1303 ரன்கள்
பகார் சமான் (பாகிஸ்தான்) - 1275 ரன்கள்
ராஸ்ஸி வான் டெர் டுசென் (தென் ஆப்ரிக்கா) - 1267 ரன்கள்.
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி நாளை மோத உள்ளது.