< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம்: மார்கஸ் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை

Image Tweeted By @ICC 

கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம்: மார்கஸ் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை

தினத்தந்தி
|
26 Oct 2022 3:34 PM GMT

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார்.

பெர்த்,

டி20 உலக கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 59 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*

2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010

2. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014

அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மார்கஸ் ஸ்டோனிஸ் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் அவர் ஸ்டீபன் மைபர்க் உடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007

2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*

2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014

மேலும் செய்திகள்