< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். வர்ணனை குழுவில் ஸ்டீவ் ஸ்மித்..?
கிரிக்கெட்

ஐ.பி.எல். வர்ணனை குழுவில் ஸ்டீவ் ஸ்மித்..?

தினத்தந்தி
|
28 March 2023 4:50 AM IST

சர்வதேச போட்டி காரணமாக இந்த தடவை ஐ.பி.எல்.-ல் விளையாடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித், ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் ஒதுங்கினார். முக்கியமான சர்வதேச போட்டி காரணமாக இந்த தடவை ஐ.பி.எல்.-ல் விளையாடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் அவர் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், 'நான் 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் இணைகிறேன். இந்தியாவில் உள்ள சிறப்பு வாய்ந்த உற்சாகமிக்க ஒரு அணியினருடன் கைகோர்க்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர் ஏதாவது ஒரு அணியில் காயமடைந்த வீரருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அவர் வர்ணனையாளர் குழுவினருடன் இணைந்து ஐ.பி.எல். ஆட்டங்களை முதல்முறையாக வர்ணனை செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் செய்திகள்