< Back
கிரிக்கெட்
டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்: புதிய சவாலை ஏற்க தயாராகும் ஸ்டீவ் சுமித்..!!
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்: புதிய சவாலை ஏற்க தயாராகும் ஸ்டீவ் சுமித்..!!

தினத்தந்தி
|
10 Jan 2024 4:15 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.

மெல்போர்ன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது,

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் சுமித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியோடு ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இதன்பின் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பப் போகும் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் கேமரூன் க்ரீன், பேன்கிராப்ட் உள்ளிட்டோரை கூறி வந்தனர்.

இந்நிலையில் திடீரென ஸ்டீவ் சுமித்தை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. முன்னதாக மூன்றாவது இடத்தில் ஆடி வந்த ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனின் வருகையால் நான்காவது இடத்திற்கு மாறினார். பந்தை சேதப்படுத்திய புகார் காரணமாக ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவ் சுமித், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக ஸ்டீவ் சுமித்தின் பேட்டிங் சராசரி 60 ஆக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக மேட் ரென்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தேர்வு குழு அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது ஸ்பின் பவுலராக தொடங்கிய ஸ்டீவ் சுமித் பயணம், அடுத்தடுத்து பேட்ஸ்மேனாக உச்சம் பெற்றது. தற்போது 34 வயதிலும் தொடக்க வீரராக களமிறங்கி புதிய சவாலை ஏற்க தயாராகியுள்ளார்.

ஒருநாள் அணி விவரம்; ஸ்டீவ் சுமித் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஸ்சாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், லேன்ஸ் மோரிஸ், ஜை ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட், ஆடம் ஜாம்பா.

டெஸ்ட் அணி விவரம்; பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் சுமித், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க்.

மேலும் செய்திகள்