< Back
கிரிக்கெட்
ஸ்டீவ் ஸ்மித்துக்கு வெர்டிகோ தலைசுற்றல்...ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதில் சிக்கல்..?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித்துக்கு வெர்டிகோ தலைசுற்றல்...ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதில் சிக்கல்..?

தினத்தந்தி
|
7 Nov 2023 6:43 AM IST

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வெர்டிகோ தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென காரணமே இல்லாமல் சிலருக்கு அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மற்றும் பொருட்கள் சுற்றுவதுபோல இருக்கும். இதற்கு வெர்டிகோ என்று பொருள். தற்போது ஸ்டீஸ் ஸ்மித்துக்கு வெர்டிகோ தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக அவர் இன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏற்கனவே மேக்ஸ்வெல், மார்ஷ் இல்லாத நிலையில் தற்போது ஸ்டீஸ் ஸ்மித்தும் விளையாடுவது சந்தேகம் என்பதால் ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.

மேலும் செய்திகள்