நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஸ்டீபன் பிளெமிங்
|நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஸ்டீபன் பிளெமிங் இணைந்துள்ளார்.
வெலிங்டன்,
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்க உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் பாஸ்டர் ஆகியோர் இணைந்துள்ளனர். கேரி ஸ்டெட் தலைமையிலான பயிற்சிக் குழுவில் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த முடிவு வரவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை மேலும் வலுப்படுத்தும்.
இந்த மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்பட உள்ளது. பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
பிளெமிங் ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.