ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வரலாற்று பட்டியலில் 4-வது இடத்தில் ஸ்டார்க்
|நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க் 3 விக்கெட், கேமரூன் கிரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.
இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்தது. இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய அணியின் வரலாற்று பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஸ்டார் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்
2. கிளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள்
3. நாதன் லயன் - 527 விக்கெட்டுகள்
4. மிட்செல் ஸ்டார்க் - 357 விக்கெட்டுகள்
5. டென்னிஸ் லில்லி - 355 விக்கெட்டுகள்