< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் சேர்ப்பு...!

Image Courtesy: @icc

கிரிக்கெட்

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் சேர்ப்பு...!

தினத்தந்தி
|
26 Aug 2023 9:50 PM IST

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.

கராச்சி,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் ஆட உள்ளன.

இந்த தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாள அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு மாற்றம் செய்துள்ளது.

அதன்படி முதலில் அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்த தயப் தாஹிருக்கு பதிலாக சவுத் ஷகீல் 17 பேர் அணியில் இடம் பிடித்துள்ளார். தயப் தாஹிர் ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி:-

பாபர் ஆசம் (கேப்டன்), அப்துல்லா ஷாபிக், பக்கார் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆஹா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், பகீப் அஷ்ரப், ஹாரிஸ் ரால்ப், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி, சாத் ஷகீல்.

ரிசர்வ் வீரர்; தயப் தாஹிர்


மேலும் செய்திகள்