< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 2வது இன்னிங்சில் இலங்கை 94/1
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 2வது இன்னிங்சில் இலங்கை 94/1

தினத்தந்தி
|
8 Sep 2024 9:57 PM GMT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் இலங்கை ஒருவிக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில் 3வது டெஸ்ட் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் போப் 154 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை வெற்றிபெற 219 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 219 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை 2வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும், நிசங்கா 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை வெற்றிபெற இன்னும் 125 ரன்கள் தேவைப்படுகிறது. இங்கிலாந்து வெற்றிபெற 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

மேலும் செய்திகள்