< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அறிவிப்பு
|15 Aug 2023 11:08 AM IST
26 வயதான ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணமாக வெள்ளைப்பந்து போட்டிகளான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நீண்ட நாட்கள் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறுகையில், "நாங்கள் அவருடைய முடிவை ஏற்றுக்கொள்கிறோம். மேலும் எங்கள் வெள்ளை பந்து திட்டத்தில் ஹசரங்கா ஒரு முக்கிய அங்கமாக இருப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று கூறினார்.
ஹசரங்கா இலங்கைக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4 விக்கெட்டுகள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 196 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.