< Back
கிரிக்கெட்
இலங்கை டி20 அணியின் கேப்டனாகும் வனிந்து ஹசரங்கா ?

 Image : AFP 

கிரிக்கெட்

இலங்கை டி20 அணியின் கேப்டனாகும் வனிந்து ஹசரங்கா ?

தினத்தந்தி
|
29 Dec 2023 3:45 PM GMT

இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

கொழும்பு,

இலங்கை டி20 அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு கூட்டம் அடுத்த மாதம் 1 ஆம் தேதி (ஜனவரி ) நடைபெற உள்ளது. இதன் பிறகு இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை தவற விட்ட ஹசரங்கா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியுடன் 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மோதுகிறது, இந்த தொடர் அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்