< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
குஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் சேர்ப்பு
|4 April 2023 10:43 PM IST
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அகமதாபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. கடந்த 31 ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.
எல்லைக்கோட்டிற்கு அருகே வந்த கேட்சை பிடிக்க முற்பட்டபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், காயம் காரணமாக குஜராத் அணியில் இருந்து வெளியேறிய வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் சனகா சேர்க்கப்பட்டு உள்ளார்.