< Back
கிரிக்கெட்
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
26 Sept 2024 6:10 AM IST

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் காலேவில் இன்று தொடங்குகிறது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி அதே காலே மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தொடக்க டெஸ்டில் காமிந்து மென்டிசின் சதம், கருணாரத்னே, சன்டிமாலின் அரைசதம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யாவின் விக்கெட் வேட்டை (9 விக்கெட்) இலங்கைக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. இருப்பினும் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லஹிரு குமாரா, ரமேஷ் மென்டிஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்னாயகே, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பெரிஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் மறுபடியும் இலங்கையின் கை ஓங்குவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 275 ரன் இலக்கை நோக்கி ஆடிய போது 211 ரன்னில் அடங்கியது. ரச்சின் ரவீந்திரா (92 ரன்) போராடியும் பலன் இல்லை. பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து விளையாடி கணிசமான ரன்கள் எடுத்தால் மட்டுமே இலங்கைக்கு பதிலடி கொடுக்க முடியும்.

இலங்கை அணியின் உத்தேச வீரர்கள்:-

திமுத் கருணாரத்ன, பாதும் நிஸ்ஸங்க , குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால் , ஏஞ்சலோ மேத்யூஸ் , தனஞ்சய டி சில்வா (கேப்டன்) , கமிந்து மெண்டிஸ் , ரமேஷ் மெண்டிஸ் , பிரபாத் ஜெயசூரிய , லஹிரு குமாரா, அசித்த பெர்னாண்டோ

நியூசிலாந்து அணியின் அணியின் உத்தேச வீரர்கள்:-

டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளண்டல், கிளென் பிலிப்ஸ் , மிட்செல் சான்ட்னர் , டிம் சவுத்தி (கேப்டன்) , அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்

மேலும் செய்திகள்