< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட இலங்கை அணி

Image Courtesy: @OfficialSLC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட இலங்கை அணி

தினத்தந்தி
|
11 May 2024 7:00 AM IST

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

கொழும்பு,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2) தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரை முன்னிட்டு அனைத்து நிர்வாகங்களும் டி20 உலகக்கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்த தொடருக்கான இலங்கை அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்