டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
|டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.
ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும், அசலங்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-
வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீரா, நுவான் துஷார, மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா
ரிசர்வ் வீரர்கள்: அசிதா பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பனுகா ராஜபக்சே மற்றும் ஜனித் லியனகே.