ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு...!
|காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வனிந்து ஹசரங்கா அணிக்கு திரும்பியுள்ளார்.
கொழும்பு,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் ஆட்டம் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வனிந்து ஹசரங்கா அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு;-
குசல் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), வனிந்து ஹசரங்கா, பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷனகா, ஜனித் லியனகே, மஹீஸ் தீக்ஷன, தில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீரா, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், ஜெப்ரி வான்டர்சே மற்றும் அகிலா தனஞ்சயா.