இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
|இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தொடர் முடிந்ததும் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளும் முறையே மான்செஸ்டர், லண்டன் லார்ட்ஸ், லண்டன் ஓவல் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு தனஞ்செயா டி சில்வா கேப்டனாகவும், குசல் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான இலங்கை அணியில் மிலன் ரத்நாயக்க மற்றும் ஆல்-ரவுண்டர் நிசாலா தாரக ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
இலங்கை அணி விவரம்;
தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, அஷிதா பெர்ணாண்டோ, விஷ்வா பெர்ணாண்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, நிசாலா தாரக, பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரீ வாண்டர்சே, மிலன் ரத்நாயக்க.