இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட இலங்கை - விவரம்
|இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது.
இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதன் மண்ணில் இந்தியா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. ஜூலை 27 - ஆகஸ்ட் 7 வரை நடைபெறும் அந்தத் தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை விவரத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் ஜூலை 27 - ஆகஸ்ட் 7 வரை நடைபெறுகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
டி20 போட்டிகள் ஜூலை 26, 27 மற்றும் 29ம் தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 1, 4 மற்றும் 7ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் பல்லகேலேவிலும், ஒருநாள் போட்டிகள் கொழும்புவிலும் நடைபெறுகின்றன.
அட்டவணை விவரம்;
முதல் டி20 போட்டி - ஜூலை 26 - இந்திய நேரப்படி இரவு 7 மணி
2வது டி20 போட்டி - ஜூலை 27 - இந்திய நேரப்படி இரவு 7 மணி
3வது டி20 போட்டி - ஜூலை 29 - இந்திய நேரப்படி இரவு 7 மணி
முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 01 - இந்திய நேரப்படி மதியம் 2.30 மணி
2வது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - இந்திய நேரப்படி மதியம் 2.30 மணி
3வது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - இந்திய நேரப்படி மதியம் 2.30 மணி