வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்கள்... அட்டவணை வெளியிட்ட இலங்கை
|வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
கொழும்பு,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. டி20 தொடர் அக்டோபர் 13-17 வரையிலும், ஒருநாள் தொடர் அக்டோபர் 20-26 வரையிலும் நடைபெறுகின்றன.
டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புல்லாவிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் பல்லகலேவில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை விவரம்:
டி20 தொடர்:
முதல் டி20 போட்டி - அக்டோபர் 13 - தம்புல்லா
2வது டி20 போட்டி - அக்டோபர் 15 - தம்புல்லா
3வது டி20 போட்டி - அக்டோபர் 17 - தம்புல்லா
ஒருநாள் தொடர்:
முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 20 - பல்லகலே
2வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 23 - பல்லகலே
3வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 26 - பல்லகலே