< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிராக 27 வருடங்களாக தொடர்ந்த மோசமான வரலாற்றை மாற்றிய இலங்கை
|8 Aug 2024 2:26 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கொழும்பு,
இலங்கை - இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன் மூலம் 1997-ம் ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர்களை வென்றதில்லை என்ற 27 ஆண்டு கால மோசமான வரலாற்றை இலங்கை மாற்றியுள்ளது.