இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை நட்சத்திர வீரர்கள் விலகல்
|இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான பதிரனா மற்றும் தில்ஷன் மதுசங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, சமிகா கருணாரத்ன, அகில தனஞ்சயா, முகமது ஷிராஸ், மஹேஷ் தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ, எஷான் மலிங்கா.